கிருஷ்ணகிரி அருகே கர்நாடக அரசு பேருந்து மோதி இருவர் உயிரிழப்பு

 
accident

கிருஷ்ணகிரி அருகே கர்நாடக அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  

கரநாடக அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழகத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசியநெடுசாலையில் வந்துகொண்டிருந்த போது கர்நாடக அரசு பேருந்தும், அந்த வழியாக வந்த இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தமிழகத்தை சேர்ந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தால் கட்டுப்பாட்டை இழந்த கர்நாடக அரசு பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது நாசமானது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த பயணிகள் சிறிய காயங்களுசன் உயிர்தப்பினர்.  விபத்து குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயனைப்பு வீரர்கள் தீயை வேகமாக அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுந்தரேசன், கணேசன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.