டிச.2ல் போக்குவரத்து தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை..

 
டிச.2ல் போக்குவரத்து தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை.. 

டிசம்பர் 2ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக  தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. 


போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து டிசம்பர் 2ம் தேதி முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.   தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள  தொழிலாளர் ஆணைய அலுவலகத்தில் டிசம்பர் 2ம் தேதி தேதி பிற்பகல் 2:30 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.   பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

BUS

இந்த பேச்சுவார்த்தையில், சென்னை எம்.டி.சி பேருந்து ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், அரசு விரைவு போக்குவரத்து துறை ஊழியர்கள் சங்க முக்கிய நிர்வாகிகள், பதிவுபெற்ற போக்குவரத்து சங்க நிர்வாகிகள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்திருக்கிறது.  இதில் போக்குவரத்துக்கு ஊழியர்கள் கோரிக்கைள் பற்றி விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.