தமிழகம் முழுவதும் டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் - டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி..

 
Sylendra babu

தமிழகம் முழுவதும் டி.எஸ்பிக்களை  பணியிட மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.  

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

 • “தேனி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்து வரும்  பிரபாகரன் -   கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.  
 • தேனி மாவட்டத்தில் பயிற்சியில் இருக்கும் ராஜேஸ்வரன் -   நெல்லை ஜங்சன் சரக உதவி கமினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  
 • காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் வினோஜி  -  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.  
 • திருவண்ணாமலை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பி ரமேஷ் -   கள்ளக்குறிச்சி சப்-டிவிஷன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

தமிழக அரசு

 • மதுரை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ரவிக்குமார் -   கோவை மாநகரம் ஆர்.எஸ்.புரம் உதவி ஆணையராக  நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
 • திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஈஸ்வரன் -  திருப்பூர் மாநகர உளவுத்துறை உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 •  காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிஎஸ்பி பிரகாஷ் -  சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  
 • சென்னை மாநகர் உளவுத்துறை உதவி ஆணையாளர் மணிமேகலை - செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சரக டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
 • திருச்சி மாநகர குற்ற ஆவண காப்பக உதவி ஆணையாளர் கென்னடி  - திருச்சி கண்டோன்மெண்ட் உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

தமிழக காவல்துறை

 • திருச்சி மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் பாரதிதாசன் -  திருச்சி மாவட்டம் ஜீயர்புரம் சரக டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 • காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள டிஎஸ்பி சகாயஜோஸ் - தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சரக டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.  
 • கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனர் பார்த்திபன் - கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சரக டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 • ஈரோடு அதிரடிப்படை டிஎஸ்பி சுகுமார் -  கோவை மாநகர சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார்.
 • ஆலங்குளம் சரக டிஎஸ்பி பொன்னரசு - தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.