நடிகர் விஜய்க்கு போக்குவரத்து போலீசார் ரூ. 1000 அபராதம் விதிப்பு

 
vijay 68

 நடிகர் விஜய்க்கு போக்குவரத்து போலீசார் ரூ. 1000 அபராதம் விதித்துள்ளனர்..  

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.  இந்த படத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இந்த மாநிலங்களில் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்தது.  அதேநேரம் விஜய்க்கு ஆதரவாக தமிழ் திரைப்பட இயக்குநர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று  வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் எந்தவித சிக்கலும் இல்லை என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளார் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி உறுதியளித்துள்ளார்..   

vijay

இதற்கிடையே கடந்த 20ம் தேதி  சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நாமக்கல், சேலம், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது ரசிகர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.   சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய் மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் என்பதால், அன்றைய தினம்  பனையூரில் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

vijay

ரசிகர்களை சந்திப்பதற்காக நீலாங்கரை வீட்டில் இருந்து, பனையூருக்கு நடிகர் விஜய் கருப்பு நிற காரில் சென்றார். அந்தக் காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் சென்னை போக்குவரத்து போலீஸார்  விஜய் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.  நடிகர் விஜய்க்கு ரூ. 1000  அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். விஜய்யின் கார் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.