குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

 
tn

குற்றாலத்தில்  சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Courtallam

வடகிழக்கு பருவமழையானது வழக்கத்தை விட இந்த ஆண்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் குறைவாகவே பெய்தது எனலாம். வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென தென்காசி மாவட்டத்தில் மழை பெய்து தொடங்கியது . மேற்கு தொடர்ச்சி மலையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் குறைந்த அளவில் நீர் வந்து கொண்டிருந்த நிலையில்,  திடீரென பெய்த மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்தது.  இதனால் நேற்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை.  அதேபோல நெல்லையிலும் சேரன்மகாதேவி, களக்காடு ,அம்பை, ராதாபுரம் ,நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்தது.

tn

இந்நிலையில்  தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  நீர் வரத்து சீரானதால் ஐந்தருவி,  மெயின் அருவி , பழைய குற்றாலம் உள்ளிட்ட  அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.