இந்த மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை!!

 
local holiday

ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

tn

புகழ்பெற்ற சிவாலய தலங்களில்  ஒவ்வொரு ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம். மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரம் அன்று சேந்தனார் வீட்டுக்கு சிவன் பெருமான் களி உண்ண சென்ற தினத்தையே ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடுகின்றனர். இந்நிலையில் உத்தரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்காக இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 21 ஆம் தேதி பணிநாளாக அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

local holiday

அதேபோல்  சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடக்கும் நிலையில் இன்று  கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 28ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.