"சில எட்டப்பர்கள் உடனிருந்தே அதிமுகவிற்கு துரோகம் செய்கிறார்கள்" - ஈபிஎஸ் தாக்கு!!

 
ep

சில எட்டப்பர்கள் உடனிருந்தே அதிமுகவிற்கு துரோகம் செய்கிறார்கள்என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்து  பேசியுள்ளார்.

eps

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை திட்டமிட்டபடி நடைபெற்றது.  சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள,  ஓ. பன்னீர்செல்வம் நிகழ்ச்சியை புறக்கணித்தார்.  இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்த நிலையில் ஈபிஎஸ் கை  ஓங்கியது. இதனால் ஓபிஎஸ் புறந்தள்ளப்பட்டு ஈபிஎஸ் கட்சியின் தலைமையை கைப்பற்றினார். அத்துடன் ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து  பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, "அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள்.அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. இந்த கட்சியில் இருந்து கொண்டே கட்சியை அழிக்க நினைத்த எட்டப்பர்கள் வேண்டுமானால் கட்சியிலிருந்து வெளியேறலாம், தொண்டர்கள் இங்கேயேதான் இருப்பார்கள். ஒரு மாதம் கூட ஆட்சி நிலைக்காது என கூறிய ஸ்டாலினே அதிர்ந்து போகும் அளவுக்கு நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்தோம். மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது;திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம், நீங்கள் நினைப்பதை நிச்சயமாக நிறைவேற்றுவேன்" என்றார்.

eps

"கட்சியிலும், அரசிலும் எனக்கு பதவியை கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவிடம் நற்பெயர் வாங்குவது சாதாரண விஷயம் அல்ல . அதிமுகவை காக்க வேண்டிய சூழலில் உள்ளோம். ஒற்றை தலைமை தீர்மானத்தை ஏக மனதாக நிறைவேற்றியுள்ளோம். நீங்கள் விரும்பிய தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று கூறினார்.