"ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை எதுவும் இல்லை" - செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

 
tn

 ஓணம் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

tn

ஓணம் இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். ஓணம் பண்டிகையை ஒட்டி சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர், ஈரோடு, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருப்பூர்  மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 08.09.2022 அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் சில மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையானது செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனவும், மேற்படி தினத்தன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) வழக்கம்போல் செயல்படும் எனவும் மாவட்ட நிருவாகத்தால் தெரிவிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.