ஆட்டோ ஓட்டுநரை குத்திக்கொன்ற நண்பர்கள்...

 
ஆட்டோ ஓட்டுநரை குத்திக்கொன்ற நண்பர்கள்...

பண்ருட்டி அருகே  ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

murder

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த  தட்டாஞ்சாவடி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்.  ஆட்டோ ஓட்டுனரான இவர்  தட்டாஞ்சாவடி காளிகோவில் பின்புறம் உள்ள சுடுகாட்டு பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து  மது அருந்தியுள்ளார். அப்போது, கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக பேசிக்கொண்டிருந்ததில் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  பின்னர் இந்த வாக்குவாதம் முற்றி,  நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஆட்டோ டிரைவர் சக்திவேலை கத்தியால் குத்தி படுகொலை செய்தனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Murder

மேலும்,  இந்த சம்பவம் தொடர்பாக  சக்திவேலின் நண்பர்கள் சுமன் மற்றும் அவரது நண்பரை பிடித்து  விசாரணை நடத்தியதில்,  ஆட்டோ ஓட்டுநர்  சக்திவேலுக்கும் அவரது நண்பர் சுமனுக்கும் கள்ளக்காதல் விவகாரம் ஒன்றில் ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.  இதன்காரணமாகவே இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.  இந்தச் சூழலில் ஆட்டோ  ஓட்டுநர் சக்திவேல் கொலை வழக்கில் தொடர்புடைய  அவரது நண்பர்களான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள்  பண்ரூட்டி - சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் , குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என  உறுதியளித்தனர். அதன்பேரில் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.