அந்த செய்தியை கேட்டதும் பத்திரிகையாளரின் பைக்கில் பறந்த இபிஎஸ் - வைரலாகும் வீடியோ

 
e

திடீரென்று வந்த  அந்த போன் காலில் வந்த செய்தியை எடுத்து அங்கிருந்த பத்திரிக்கையாளர் ஒருவரின் பைக்கில் ஏறி அவசரமாக பறந்தார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது சொந்த ஊரான எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் தனது தோட்டத்தில் பொங்கல் விழாவை கொண்டாடினார்.   இதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்யப்பட்டு தயாராக இருந்தன.   எடப்பாடி பழனிச்சாமியும் அப்போது அங்கு இருந்தார்.  அந்த நேரத்தில் அவருக்கு ஒரு தொலைபேசி செல்போன் அழைப்பு வந்திருக்கிறது. 


 எதிர்முனையில் பேசியவர் சொன்னவரின் தகவலை கேட்டதும் அங்கிருந்த பத்திரிகையாளரின் பைக்கில் அவசரமாக புறப்பட்டு சென்றார்.  பத்திரிக்கையாளர் பைக் ஓட்ட எடப்பாடி பழனிச்சாமி பின்னால் அமர்ந்து கொண்டு அவசர அவசரமாக சென்றார்.   எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக வந்த தகவலை அடுத்து அவசரமாக அவர் அப்படிப் புறப்பட்டார்.  

 முன்னாள் முதல்வர் ஒருவர் கொஞ்சமும் ஆடம்பரம்  எதுவும் இல்லாமல் பாதுகாப்பும் எதுவும் இல்லாமல் இப்படி பைக்கில் அமர்ந்து சென்றது அங்கிருந்தவர்கள் இடையே பரபரப்பு ஏற்படுத்தியது.   இதை சிலர் வீடியோவாக எடுத்து வளைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர் அது வைரலாகி வருகிறது.