“நிதியமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் எடுக்கவில்லை”

 
tr baalu

நிதியமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் எடுக்கவில்லை என கூறுகிறார்கள், இதேநிலை தொடர்ந்தால் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என 4 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். 

For DMK's TR Baalu, it won't be an easy battle in Thanjavur-Politics News ,  Firstpost

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, “காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்கள் மக்களவையில் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சபை நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற நடைமுறை மக்களவையில் இல்லாத ஒன்று ஆனால் இன்று நடைபெற்றுள்ளது. கடந்த வாரம் அனைத்து கட்சி கூட்டத்திலும் சரி அவையிலும் சரி அக்னி பத் திட்டம், விலைவாசி உயர்வு, மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசவேண்டும் என்று கூறினோம். அதை தானே இன்று நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களும் கூறியபோது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

மக்களவையின் இத்தகைய முடிவு ஜநாயகத்திற்கு ஆபத்தான ஒன்று. இதுபோன்ற நிலை ஒத்துவராது. திமுக இந்த முடிவுக்கு தனது கடுமையான கண்டங்களை தெரிவித்து கொள்கிறது. சஸ்பெண்ட் செய்யும் அளவுக்கு இவை மிக பெரிய குற்றம் இல்லை. இந்த நிலையை நாங்கள் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் தெரிவித்து உள்ளோம், அவரும் தனது கண்டனங்களை தெரிவித்து உள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுபோன்ற நடவடிக்கை தொடர்கதையாகி வருகிறார். சபாநாயகர் அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறார். நிதியமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தான் விலைவாசி உயர்வு விவகாரம் விவாதத்திற்கு எடுக்கமுடியவில்லை என கூறுகிறார்கள். நிர்மலா சீதாராமனை தவிர வேறு எந்த அமைச்சரும் இல்லையா? பதில் கூறுவதற்கு என கேள்வி எழுப்பிய டி.ஆர் பாலு இதேநிலை தொடர்ந்தால் ஜநாயகத்திற்கு நல்லதல்ல” என்றார்.