வெளிநாட்டு வேலைகளில் தமிழர் ஏமாறுவதை தடுங்கள்: டிடிவி தினகரன்

 
ttv

வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை  செயல்படக்கூடியதாகவும் இருப்பது அவசியமாகும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

tn

தாய்லாந்து நாட்டில் வேலை ஏற்படுத்தி தருவதாக கூறி மியான்மர் நாட்டுக்கு இந்தியர்கள் சட்டவிரோதமாக நாடு கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் இருநாட்டு அரசுகளின் துணையோடு இந்தியர்கள் மீட்கப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட இந்தியர்கள் சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பது  இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இதுவரை 30 இந்தியர்கள் ஆள் கடத்தல் நடவடிக்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மியான்மர் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தவோ அல்லது கடத்தப்பட்டவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்க முடியாத சூழலில் உள்ளது.  இரு மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மியான்மரில் நடக்கும் ஆள் கடத்தல் விவகாரம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தது. கடந்த ஜூலை 5ஆம் தேதி விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் தாய்லாந்து நாட்டில் ஐடி துறையில் வேலை என விளம்பரம் அளித்து பின்னர் மியான்மர் நாட்டுக்கு பலர் கடத்தப்படுவது குறித்து அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தது.

ttn

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "வெளிநாட்டு வேலைக்குச் சென்று மியன்மார் மற்றும் தாய்லாந்தில் சட்ட விரோத கும்பலிடம் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.சித்ரவதைக்கு ஆளான தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் பேசும் காணொளியைப் பார்க்கும்போது மிகுந்த வேதனை ஏற்படுகிறது. அதனால்தான், வெளிநாட்டு வேலைகளில் தமிழர்கள் யாரும் ஏமாற்றப்படாமல் இருப்பதற்கு சரியான வழிமுறைகளை வகுத்திட வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை பெயரளவிற்கு மட்டுமில்லாமல், செயல்படக்கூடியதாகவும் இருப்பது அவசியமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.