"திறமையில்லாத ஸ்டாலின் அரசு வழக்குகள் மூலம் மிரட்ட நினைக்கிறது" - அமைச்சர் சி.வி.சண்முகம்

 
ttn

திறமையில்லாத ஸ்டாலின் அரசு வழக்குகள் மூலம் மிரட்ட நினைக்கிறது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கக் கோரி காவலருடன் சி.வி.சண்முகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களிலும் ,எஸ் .பி. வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

tnn

இந்த சூழலில் சென்னை அடையாறில் உள்ள விஜயபாஸ்கர் இல்லத்திற்கு சி.வி. சண்முகம் வருகை புரிந்தார். ஆனால்  அவரை காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதனால் காவலருடன் சி.வி.சண்முகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  "இது ஜனநாயக நாடா, என்ன நாடு இது?" 'சார் நான் விஜயபாஸ்கர் வீட்டிற்கு போகணும்; நான் எங்க வேண்டுமானாலும் செல்வேன், அதை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்று கூறினார். 

rn

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே லஞ்சஒழிப்புத்துறை சோதனை செய்து வருகிறது. எதிர்கட்சிகளை அடக்கி ஒடுக்கவே சோதனை நடைபெறுகிறது .பால் விலை, சொத்துவரி மின்கட்டண உயர்வை மறைக்கவே  சோதனை நடைபெறுகிறது. மின்சார கட்டணத்தை தொடர்ந்து பேருந்து கட்டணமும் உயரப்போகிறது.  தன்னுடைய அமைச்சரவையில் ஒரு அமைச்சர் பல நூறு கோடிகளை செலவு செய்ய ஏது பணம்???இது யாருடைய பணம்???முதல்வர் விளக்கம் கொடுக்க வேண்டும்