எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் கைது!!
Thu, 29 Dec 20221672282831839

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது. கடந்த 22 ஆம் தேதி காரைக்கால் அடுத்த காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது, அவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய இலங்கை கடற்படை ஆறு நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்டது
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்து விட்டதாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 4 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது.