சீர்காழி தாலுகா: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

 
se

சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்  அம்மாவட்ட ஆட்சியர் லலிதா.

 வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது.  டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழை பெய்தது.    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மட்டும் வரலாறு காணாத வகையில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆறு மணி நேரத்தில் 44 சென்டிமீட்டர் மழை  கொட்டி தீர்த்தது.  இந்த அதிக கனமழையினால் சீர்காழி  பகுதி முழுவதும் வெள்ளைக்காடாக மாறி இருக்கிறது.   சீர்காழியை சுற்றி உள்ள கிராமங்கள் அனைத்தும் தனித்தீவு போல் காட்சியளிக்கின்றன.

s

 முதல்வர்  ஸ்டாலினும் மழை பாதிக்கப்பட்ட சீர்காழி , தரங்கம்பாடிபகுதியினை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் .  சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.  இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

 மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று  விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருந்தா அம்மாவட்ட ஆட்சியர் லலிதா.   பள்ளிகளில்  தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்ற அந்த உத்தரவினை வெளியிட்டிருந்தார்.  இன்று கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர்  விடுமுறையாகும்.

இந்நிலையில், சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை 17ம் தேதி  விடுமுறை அளித்துள்ளார்  மாவட்ட ஆட்சியர் லலிதா.