அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியை நடத்த ரூ.38 லட்சம் - அரசாணை வெளியீடு!!

 
tn govt

அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியை நடத்துவதற்கான தொகையினை ஒரு லட்சத்திலிருந்து, ரூ.38 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

tn

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை கொண்டாடும் வகையில் 2004 -2005 ஆம் ஆண்டு முதல் வருடம் தோறும்,  செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று மாவட்ட அளவில் அண்ணா மிதிவண்டி போட்டிகள் ரூபாய் 3125 வீதம் 32 மாவட்டங்களில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

govt
2022 -23 ஆம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மானிய கோரிக்கையின் போது,  மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன்,  விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட தொகையினை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 38 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தார்.  இந்நிலையில் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியை நடத்துவதற்கான தொகையினை ஒரு லட்சத்திலிருந்து ரூபாய் 38 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது.