ராஜேந்திர பாலாஜி தமிழகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை - உச்சநீதிமன்றம் கறார்

 
ra

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி மறுத்துள்ளது உச்சநீதிமன்ற.   தமிழகத்திற்கு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய அவரின் கோரிச்சையை நிராகரித்துள்ளது.  

 ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக எழுந்த  புகாரில் ராஜேந்திர பாலாஜியின் மீது வழக்கு தொடரப்பட்டது .  இதை அடுத்து ராஜேந்திர பாலாஜியை விசாரித்த உச்ச நீதிமன்றம்  நான்கு வார இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

su

 நிபந்தனையாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் காவல் நிலைய எல்லையை தாண்டி ராஜேந்திர பாலாஜி பயணிக்க கூடாது என்று கடந்த 12ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று கோரி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  இந்த மனு கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி விசாரணைக்கு சென்றிருந்தது.  

 விசாரணையின் போது இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீனை மேலும் நான்கு மாதங்களுக்கு நீடித்தது . வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் காவல் நிலைய எல்லையினை தாண்டக் கூடாது என்கிற நிபந்தனையை தளர்த்தி தமிழகம் முழுவதும் பயணம் செய்யப்படும் கடவுச்சீட்டு புதுப்பிக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டது.  விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

 கடந்த 1ம் தேதி அன்று இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்து இருக்கிறது.   அப்போது நாடு முழுவதும் பயணம் செய்யும் வகையில் அதாவது தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்யும்படி ஜாமின் நிபந்தனை தளர்த்த வேண்டும் என்று  ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர்,  ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் தொடரக்கூடாது.  இது தொடர்பாக தமிழக அரசிடம் ஆலோசனை  பெற வேண்டும் .

இரு தரப்பின்  வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜேந்திர பாலாஜி  நிபந்தனையே கலக்கப்போகிய மனுவை இன்று இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சொல்லி தள்ளி வைத்திருந்தார்.  அதன்படி இன்று நடந்த விசாரணையில் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டில் விட்டு வெளியே செல்ல அனுமதி வேண்டும் என்ற கோரிய  மனுவை தள்ளுபடி செய்தார்.