தமிழகத்தில் எவ்வித புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை - ராதாகிருஷ்ணன்

 
Radhakrishnan

தமிழகத்தில் கொரோனா தொடர்பாக எவ்வித புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தேசிய ஆஸ்துமா தினத்தையொட்டி சென்னை தங்க சாலையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி வளாகத்தில் நுரையீரல் நோய் சிகிச்சை பிரிவு சார்பில் ஆஸ்துமா தொடர்பான கையேட்டை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.  நிகழ்ச்சிக்குப் பின் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் வந்த நிலையில் மற்ற நோய்கள் பரவாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐஐடியில் 7300 பேருக்கு கொரொன பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஐஐடி முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இதே போன்று செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒருவருக்கு வந்த நிலையில் தற்போது 16 பேருக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தேவையற்ற பீதி தேவையில்லை கவலைப்படத் தேவையில்லை.  ஒரு நாளில் 30 என்பது ஒரு நாள் 70  கூட வரலாம். நாம் அதை கட்டுப்படுத்தி விட்டோம். தமிழ்நாட்டில் நல்ல கண்ட்ரோலில் உள்ளது.மற்ற மாநிலங்களில் அதிகமாக இருப்பதால் சற்று கண்காணிப்பில் உள்ளோம். ஐஐடியில் இருப்பது போன்று செங்கல்பட்டிலும் பாதிப்பு குறைவாகவே உள்ளது. 

radhakrishnan

யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை அதனால் முழு கண்காணிப்பில் உள்ளனர். கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிதாக எந்த ஒரு வழிகாட்டி நெறிமுறைகளும் போடவில்லை. புதிதாக எதையும் நாங்கள் சொல்லவில்லை. தேவையற்ற பீதியோ அல்லது குழப்பங்களுக்கு மக்கள் ஆளாக வேண்டாம். இவ்வாறு தெரிவித்தார்.