பல்கலைக்கழக தேர்வில் சாதி குறித்த கேள்வி : ஓபிஎஸ் கண்டனம்..

 
op

 சேலம்  பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வில்  சாதி குறித்த கேள்வி  இடம்பெற்றதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் இவர் தான்? – ஆளுநர் அதிரடி உத்தரவு!

சேலம் பெரியார் பலகலைக்கழக  செமஸ்டர் தேர்வு வினாத்தாளில்,  4 சாதி பிரிவுகளை குறிப்பிட்டு எது தாழ்த்தப்பட்ட சாதி?, என்கிற  வகையிலான சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றிருந்தது.  இந்த விவகாரம் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறது.   அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம்  தெரிவித்திருக்கின்றனர்.   அந்தவகையில் ஓ.பன்னீர் செல்வம்  தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.

ஓபிஎஸ்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை முதலாம் ஆண்டு வரலாறு பருவத் தேர்வில் சாதி குறித்து வினா கேட்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் அவர்கள் அளித்திருக்கும் விளக்கமும் ஏற்புடையதாக அல்ல.  எனவே, தமிழ்நாடு அரசு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கும் வகையில், நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அஇஅதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.