அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே தமிழகத்தில் பாஜக வளரும்- புகழேந்தி

 
pugalendhi

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை விழாவிற்கு எடப்பாடி செல்லாதது ஏன்? என பெங்களூர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

12 மணி நேரமா பால் காய்ச்சினார்..?' - அ.தி.மு.க-விலிருந்து புகழேந்தி  நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?| What was the background behind the removal of  Pugalendhi from the AIADMK?

நாளை நடைபெற உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவிற்கு ஓ பன்னீர்செல்வம் அணி சார்பில் சேலம் மாநகர் மாவட்ட கழகம், புறநகர் மாவட்ட கழகம் கலந்து கொள்கிறது. விழாவில் பங்கேற்பதற்காக நூற்றுக்கணக்கான வாகனங்களில் மதுரை செல்ல உள்ளதாக தெரிவித்த பெங்களூர் புகழேந்தி, எடப்பாடி பழனிச்சாமி ஜாதி வெறி பிடித்தவர்,  அதனால் தான் அவர் அங்கே செல்லவில்லை என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “தென்தமிழகம் அதிமுகவின் கோட்டையாக  உள்ளது. தென்தமிழகம் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. ஆனால் ஏனோ தென் தமிழக மக்களை எடப்பாடி பழனிச்சாமிக்கு பிடிக்கவில்லை . அங்கு செல்ல அவருக்கு பயமா? அல்லது வெறுப்பா?. எடப்பாடி பழனிச்சாமி 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்து தான்  தேர்தல் தோல்விக்கு காரணம்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் விழாவிற்கு எடப்பாடி பழனிச்சாமி ஏன் செல்லவில்லை? என்பதற்கு  முறையான விளக்கம் அளிக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ய வேண்டும். அவருக்கு தெரிந்து தான் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது என அருணா ஜெகதீசன் அறிக்கை தெளிவாக கூறியுள்ளது. அங்கு நடந்த ஒவ்வொரு நடவடிக்கையும் டிஜிபி மூலமாக தெரிவிக்கப்பட்டும் தான் டிவியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என முதல்வர் சொல்வது வெட்கக்கேடாகும். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ய வேண்டும். இதில் பாஜக அண்ணாமலை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேசி வருகிறார். அண்ணாமலை  வீட்டில் இப்படி ஒரு  துப்பாக்கிச்சூடு  நடந்திருந்தால் அவர் இவ்வாறு பேசுவாரா? இதுகுறித்து அண்ணாமலை தெளிவாக பத்திரிகையாளர்களை  சந்தித்து தெரிவிக்க தயாரா? 


பத்திரிகையாளர்களை தரை குறைவாக பேசி வரும் அண்ணாமலையால் தமிழகத்தில் பாஜக வளராது. அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே தமிழகத்தில் பாஜக வளரும், கோவை சிலிண்டர் வெடிவிபத்தில் விசாரணை அறிக்கை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் , அந்த  ரகசியங்களை பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவது குறித்து உள்துறை அமைச்சகம் விளக்க வேண்டும். கொலை, கொள்ளை சம்பவங்களில்  ஈடுபடுபவர்கள் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள். முதல்வர் கவனம் செலுத்தி,  கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.