இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார் பிரதமர் மோடி

 
modi and ilayaraja

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.

திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிகிறார். அதாவது, காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் 2018, 2019 ஆண்டுகள் மற்றும் 2019 -2020 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி பட்டம் வழங்குகிறார். இதற்காக காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் பல்கலைக்கழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இதனிடையே பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார். இதேபோல் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கும் பிரதமர் மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார்.  பட்டமளிப்பு விழாவுக்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் நாளை மதுரை வருகிறார். பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.