#BREAKING பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!

 
train

பொங்கல் பண்டிகையையொட்டி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்றுமுதல் தொடங்கியுள்ளது.  

electric train

தீபாவளி,  பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளின் போது சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று,  குடும்பத்துடன் பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கம்.  அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 14 போகிப் பண்டிகை துவங்கி 17ஆம் தேதி வரையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது . இதற்காக சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன் டிக்கெட் எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பயணிகள் முன்கூட்டியே ரயில் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். 

train

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று பயணிகள் ரயில் நிலைய கவுண்டர்களில் காலை 8 மணி முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  120 நாட்களுக்கு முன்பு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் முறைப்படி அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று ஆன்லைன் மற்றும் கவுண்டர்களின் தொடங்கியுள்ளது.