பணியில் இருக்கும்போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர்!

 
police

சென்னை அடுத்த அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருகே ஆயுதப்படை காவலர் சரவணன்குமார் (30) என்பவர் பாதுகாப்பு பணியில் இருக்கும் பொழுதே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

One in every 3 women who commit suicide globally is an Indian

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சரவணகுமார்,(30)  இவர் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இன்று அம்பத்தூரில் உள்ள மத்திய அரசின் தொலை தொடர்பு 
சிறப்பு நிறுவனத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.  அப்போது பணியில் இருக்கும் பொழுது தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் அம்பத்தூர் காவல் துணை ஆணையர் மகேஷ், உதவி ஆணையர் கனகராஜ் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சரவணக்குமார் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது பணி இறுக்கத்தில் தற்கொலை செய்துகொண்டாரா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.