நண்பனை கடத்தி பணம் பறிக்க போட்ட திட்டம்! தப்பி ஓடியதால் கல்லைப்போட்டு கொலை

 
kk

நண்பனை கடத்தி வைத்து அவரின் தந்தையிடம் மிரட்டி பணம் பறிக்க போட்ட திட்டத்தை தெரிந்து கொண்டு  தப்பி ஓடியதும் வெளியே விட்டால் மாட்டிக் கொள்வோம் என்று அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருக்கிறார்கள்.  இந்த கொலையில் 39 நாட்கள்  துப்பு துலங்காமல் இருந்தது நிலையில் துப்பு துலங்கியிருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் செந்தில் குமார்.   பைனான்ஸ் தொழில் செய்து வரும் செந்தில் குமார் கடலூரில் வாடகைக்கு வீட்டில் அண்மையில்தான் குடியேறி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி அன்று இரவு 7 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற செந்தில்குமார் வீடு திரும்பவில்லை.   அவரின் செல் ஃபோனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

mm

 இதை அடுத்து அவரது மனைவி போலீசில் புகார் அளித்திருக்கிறார்.   போலீசார் விசாரணை நடத்தி வந்ததில்,  செந்தில்குமார்  அடிக்கடி மது குடிக்க செல்லும் பாகூர் அடுத்த சோரியாங் குப்பம் கிராமத்திற்கு சென்று தேடி இருக்கிறார்கள்.   அங்கு காட்டுப்பகுதியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார் செந்தில் குமார்.  

இதன் பின்னர் கொலையாளிகள்  குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.   சம்பவம் நடந்து 39 நாட்களுக்கு மேலான பின்னரும் கொலையாளிகள் குறித்து துப்பு துலங்காமல் இருந்தது.   இந்த நிலையில் சோரியாங்குப்பத்தில் இருந்த மதுபான கடையில்  சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்தபோது அதில் சந்தேகம் படும் படியாக இரண்டு பேர் மதுபானம் வாங்கி சென்றது தெரியவந்தது.  

 அதில் உள்ளவர்களை குறிஞ்சி பாடியை சேர்ந்தவர்களிடம் விசாரித்த போது அதே ஊரைச் சேர்ந்த செல்வம்,  கண்ணன் என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்ததில்,  செந்தில் குமாரை அவர்கள்தான் கொலை செய்தது தெரிய வந்தது. 

 கண்ணனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் செந்தில்குமாரை கடத்தி அவரின் தந்தையிடம் இருந்து பணம் பறிக்கலாம் என்று திட்டம் போட்டு இருக்கிறார்.  இதற்காக தனது நண்பர் செல்வத்தையும் கூட்டு சேர்த்து இருக்கிறார்.  சம்பவத்தன்று வேறு ஒருவரின் செல்போனில் இருந்து மது அருந்தலாம் என்று செந்தில்குமாரை அழைத்து இருக்கிறார். அவர் வந்ததும் மது வாங்கிக் கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்று இருக்கிறார்கள்.   அங்கே செந்தில்குமார் மது போதையில் இருந்த போது அவரின் செல்போனை எடுத்து அவரின் தந்தைக்கு போன் போட்டு மிரட்டி இருக்கிறார்கள்.   இதைகேட்டு செந்தில்குமார் தப்ப நினைத்திருக்கிறார்.  அவர் தப்பிவிட்டால் தங்களுக்கு ஆபத்து என்று நினைத்த கண்ணனும் செல்வமும் செந்தில்குமாரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருக்கிறார்கள்.  இதையடுத்து செல்வம், கண்ணன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.