தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

 
PM Modi

சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். 

கொரோனா பாதிப்பு குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் மோடி ஜூன் 16, 17  தேதிகளில் ஆலோசனை | Coronavirus - Pm Narendra Modi To Discuss Covid-19  Crisis With Chief Ministers On June 16 ...

இந்த ஆலோசனையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். தமிழக அரசியலில் பாஜக மேற்கொள்ளவேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் பிரதிநிதித்துவம் பெறுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. 

முன்னதாக இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி,  44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் திரு.அனுராக்  சிங் தாக்கூர், திரு.எல்.முருகன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் திரு.ஆர்காடி ஓர்கோவிச் ஆகியோரும் பங்கேற்றனர்.