ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெறாத இரவின் நிழல், ஆர்ஆர்ஆர்

 
iravin nizhal

இந்தாண்டு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 13 இந்திய படங்களில் குஜராத்தியின்  'செலோ ஷோ' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

RRR Movie Cast, Review, Wallpapers & Trailer


2022-ம் ஆண்டு படங்களுக்கான 95வது ஆஸ்கர் விருது 2023-ம் ஆண்டு நடைபெற உள்ளது.  இதில் இந்தியா சார்பில் அனுப்பப்படவுள்ள திரைப்படத்தின் அறிவிப்பு தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள  தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் நடைபெற்றது. 

இந்த சந்திப்பில் இந்திய  திரைப்பட சங்கத்தின்  தேர்வு குழுவினர் பங்கு கொண்டு இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு தேர்வு செய்த படத்தினை அறிவித்தனர். கன்னட இயக்குனர் டி.எஸ். நாகாபரணா தலைமையில் 17 பேர் கொண்ட தேர்வுக் குழுவினர்,இந்தியா முழுவதும் இருந்து குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட 13 படங்களையம் பார்த்து ஒரு படத்தை தேர்வு செய்துள்ளனர். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் போட்டிக்கு இந்தியா சார்பில் பல சிறந்த படைப்புகளில் இருந்தும் ஒருமனதாக ஆஸ்கர் விழாவிற்கு 'செலோ ஷோ' (தி லாஸ்ட் ஷோ) என்ற குஜராத்தி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்கார் நுழைவுக்கு பரிசீலிக்கப்பட்ட படங்களின் எண்ணிக்கை 13. அதில் இந்தி மொழியில் பதாய் தோ, ராக்கெட்ரி , ஜுண்ட் , பிரம்மாஸ்திரம் , தி காஷ்மீர் ஃபைல்ஸ், அனெக் உள்ளிட்ட ஆறு படங்கள் பரிசீலிக்கப்பட்டன. அசாம் மொழியில் செம்கோர், தமிழில் இரவின் நிழல் , குஜராத்தியில் செலோ ஷோ, தெலுங்கில் இருந்து ஆர்ஆர்ஆர் , ஸ்தலம் ஆகிய படங்கள் மலையாளத்தில் இருந்து அரியுப்பு , பெங்காலியில் அபராஜிதோ ஆகிய படங்கள் இந்தாண்டுக்காக போட்டியில் பங்கேற்றன