பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பு வழங்க ஆணை - மநீம வரவேற்பு

 
kamal

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பினையும் சேர்த்து வழங்கிட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது.  இது குறித்து நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.  ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் முழு கரும்பு ஒன்றிணையும் சேர்த்து அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கிட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். இந்த பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வருகிற 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

pongal

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழு கரும்பு ! தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு ! பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாததைக் கண்டித்து மதுரையில், மேலூர் அருகே விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தினர் பங்கேற்றனர்.



மேலும், அரசை நம்பி கரும்பு பயிரிட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, கரும்பைச்  சேர்த்து வழங்குமாறு மநீம அரசை வலியுறுத்தியது.  இந்நிலையில்,மக்கள் நீதி மய்யம் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.1000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. என்று குறிப்பிட்டுள்ளது.