மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி!

 
மாங்காட்டில் பள்ளத்தில்

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேறுவதற்காக பல்வேறு இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

மாங்காடு அருகே மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர்  பலி… பரபரப்பு… – www.patrikai.com

மாங்காட்டில் இருந்து மலையம்பாக்கம் செல்லும் சாலையில் தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்தது. இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தபோது அதில் ஒருவர் முகம் குப்புற கவிழ்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த நபரை மீட்டு பார்த்தபோது அவர் இறந்து போனது தெரியவந்தது இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் தெரிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் அவர் மாங்காடு பாலாண்டீஸ்வரர் தெருவை சேர்ந்த லட்சுமிபதி(42), என்பதும் டிரைவராக வேலை செய்து கொண்டு வந்ததும் தெரியவந்தது. இன்று காலை வேலை முடித்து விட்டு வந்தவர் நிலை தடுமாறி கால்வாய்க்காக தோண்டப்பட்டு இருந்த 3 அடி பள்ளத்தில் தேங்கி இருந்த மழைநீரில் தலை குப்புற விழுந்த அவர் எழுந்திருக்க முடியாமல் மூச்சு திணறி உயிரிழந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மாங்காடு நகராட்சியில் நடைபெறும் மழை நீர் கால்வாய்க்கான பணிகளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வசதிகள் ஏதும் செய்யாமல் இருந்ததே இந்த விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். 

மேலும் இதுபோன்ற விபத்துக்கள் ஏதும் நடக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.