அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரத்தில் தனது ஆதரவாளர்கள் 40 பேர் காயம்- ஓபிஎஸ்

 
ops

அதிமுக அலுவலகத்தில் இன்று காலை நடந்த கலவரத்தில் தனது ஆதரவாளர்கள்  40க்கும் மேற்பட்டோர் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், முறையாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஓபன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Why leaders who stood by OPS earlier have deserted him | The News Minute

சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேட்டபட்டது. முன்னதாக அதிமுக அலுவலகத்தில் புகுந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கதவுகளை உடைத்து அங்கிருந்த ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.மேலும் இ.பி.எஸ்., ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. 

இந்நிலையில் பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவிந்திரநாத் வெளியில் புறப்பட்டு சென்றனர்.செய்தியாளர்கள் தனது வாகனத்தை  பின்தொடர்வதை சுதாரித்துக்கொண்ட ஒபிஎஸ் செய்தியாளர்களை 4 கிலோமீட்டர் வரை சுத்தவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். அதன்பின் வீட்டு வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அலுவலகத்தில் இன்று காலை நடந்த கலவரத்தில் தனது ஆதரவாளர்கள்  40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கை உடைந்த ஆதரவாளரை காவேரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். பிறர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன, இதுதொடர்பாக முறையாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.