கங்கை தீர்த்தத்துடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற ஓபிஎஸ்

 
o

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கங்கை தீர்த்தத்துடன் ராமேஸ்வரம் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

 ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு ஓ. பன்னீர்செல்வம்  தனது குடும்பத்தினருடன் சென்றார்.    காசியில் உள்ள கங்கை தீர்த்தத்தை கொண்டு வந்து கங்கை தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.   சிறப்பு அபிஷேகத்திலும்,  பூஜையிலும் குடும்பத்தினருடன் ஓபிஎஸ் பங்கேற்றார்.

f

ஓபிஎஸ் இரண்டாவது மகன் ஜெயபிரதீப்,  ஓபிஎஸ் தம்பி ராஜா மற்றும் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்.   இதை அடுத்து அம்பாள் மகாலட்சுமி ஆஞ்சநேயர் சன்னதிகளுக்கும் சென்று ஓபிஎஸ் தரிசனம் செய்தார்.

 கடந்த 2018 ஆம் தேதி ஓபிஎஸ் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் சென்று அக்னி தீர்த்தக் கடல் மற்றும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார்.   அதன் பின்னர் காசி சாமி தரிசனத்தை முடித்து அங்கிருந்து கங்கை தீர்த்தத்தை கொண்டு வந்து இன்றைக்கு மீண்டும் ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.