அதிமுகவில் புதிய மா.செ.க்களை அறிவித்தார் ஓபிஎஸ்

 
o

அதிமுகவில் ஏட்டிக்கு போட்டி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  ஓபிஎஸ்சின் ஒருங்கிணைப்பாளர் பதவியையும்,  பொருளாளர் பதவியையும் பறித்து அதற்கு பதிலாக எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் ஆனார்.   பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தார்.  மேலும் ஓபிஎஸ் உட்பட அவர் ஆதரவாளர்கள் அனைவரையும்  அதிமுகவிலிருந்து கூண்டோடு நீக்கம் என்று அறிவித்தார்.

oo

அதேபோல் எடப்பாடி பழனிச்சாமியையும், அவரது ஆதரவாளர்களையும் அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கம் என்று ஓபிஎஸ் அறிவித்தார்.  ஆனால் அதிமுகவின் அலுவலக சாவியை எடப்பாடி இடம் ஒப்படைக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.   அதிமுகவின் வங்கி கணக்குகளை புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கவனிக்க வங்கிகள் அங்கீகரித்து விட்டன.  இதை எதிர்த்து ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி இருக்கிறார்.  மேலும் தேர்தல் ஆணைய ஆணையம் இன்னும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்தான் என்று  கடிதபோக்க்கு வரத்து வைத்திருக்கிறது.  அதனால்தான் தேர்தல் ஆணையம் கடிதப் போக்குவரத்தை ஓபிஎஸ் இடம் வைத்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

 தேர்தல் ஆணையத்தின் முடிவை பொறுத்துதான் அதிமுகவில்  இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளர் ஆகிறாரா? கட்சியின் சின்னம் யாருக்கு போகிறது?  என்று அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கின்றன.  

 இந்நிலையில் ஓ.  பன்னீர்செல்வம் புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து உத்தரவிட்டிருக்கிறார்.   ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஆக தர்மர் , சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக வி. எம். பி. வெங்கட்ராமன்,  மதுரை மாவட்ட செயலாளராக முன்னாள் எம்பி ஆர். கோபாலகிருஷ்ணன் உட்பட 14 பேரை அவர் நியமனம் செய்து அறிவித்திருக்கிறார்.   இது குறித்த அவரது அறிக்கையில்,   கழக உடன்பிறப்புகள் புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கும் மாவட்ட கழகச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் படியும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.