திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

 
tn

திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

murder

சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒலே சரவணன் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.  35 வயதான சரவணன் தனது மனைவியுடன் காவல் குடியிருப்பு பகுதியில் நடந்து வந்திருந்த போது தலைக்கவசம் அடைந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர்  அவரை படுகொலை செய்துள்ளனர். இது குறித்து உடனடியாக திருவான்மியூர் போலீசருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த திருவான்மியூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் கொலை குற்றவாளிகள் இருவர் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ttn

அத்துடன் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். சரவணன் சமீபத்தில் தான் வழக்கு ஒன்றில் சிறை சென்று வெளியில் வந்துள்ளார். இவர்  மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே சரவணனை  மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.