வரும் சனிக்கிழமை அனைத்து பள்ளிக் கல்லூரிகளுக்கும் வேலை நாள்!

 
Tomorrow school leave

தீபாவளிக்கு மறுதினம் விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்டும் வகையில் தமிழகம் முழுவதும் வருகிற சனிக்கிழமை(19ம் தேதி ) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த அக்டோபர் 24ம் தேதி திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தீபாவளி பண்டியையை கொண்டாட மக்கள் சொந்த ஊர் சென்றதால், தீபாவளிக்கு மறுதினம் செவ்வாய் கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கத்தினர், மற்றும் பெற்றோர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி ஊருக்கு வர எளிதாக இருக்கும் வகையில் தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய் கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. விடுமுறை அறிவிக்கும் போதே, அந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நவம்பர் 19ம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், அந்த வேலை நாள் நாளை மறுதினம் வரவுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 25ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது ஈடும் செய்யும் வகையில் வருகின்ற 19ஆம் தேதி பணி நாளாக அறிவித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.