ஜூன் 9ல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்? எங்கு தெரியுமா?

 
nayan-and-vignesh-02

பிரபல நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் வருகிற ஜூன் 9ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

nayan-and-vignesh-3

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை கண்டு இவர் கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். சமீபத்தில் ரவுடி பிக்சர்ஸ் மூலம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை நயன்தாரா தயாரித்திருந்தார்.  இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் -  நயன்தாரா ஜோடி திருப்பதி,  சீரடி உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். 

nayan

சமீபத்தில்  நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் மோதிரம் மாற்றி எளிமையாக நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நிலையில் , இவர்களின் திருமணம் எப்போது என்ற கேள்வி அவர்களது ரசிகர்கள் மத்தியில் வெகுவாக இருந்தது.

nayan

இந்நிலையில் நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோர் திருமண ஏற்பாடுகளை பார்வையிட்டுள்ளனர்.

nayan

கடந்த வாரம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்ட நிலையில் இன்று திருமண இடத்தை முன்பதிவு செய்து பார்வையிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவர்களின் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.