இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

 
Tomorrow school leave

நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ளது நாகூர் நாகநாதர் கோயில்.ஆதிசேஷன் சிவபெருமானை பூஜை செய்து அருள் பெற்ற திருத்தலம் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் நாகநாதர் என்றும் இறைவி நாகவள்ளி என்றும் அழைக்கப்படுகின்றனர்.நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன. 

tn

இந்நிலையில் நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  நாகை மாவட்டம் நாகூர் நாகநாதர் கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.

schools open

இதையொட்டி, நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூலை 30-ம் தேதி நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் செயல்படும் என்று அறிவித்துள்ளார்.