" திமுக அரசு வேண்டாமென சொன்னாலும் நீட் தேர்வு கட்டாயம் இருக்கும்" - அண்ணாமலை

 
annamalai

நீட் வேண்டாமென திமுக அரசு சொன்னாலும், நீட் தேர்வு கட்டாயம் இருக்கும் என்று   அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Annamalai

சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் ஏழை எளிய மக்களை ஏமாற்றுவதை திமுக அரசு நிறுத்த வேண்டும். மாணவர்களை தவறாக வழி நடத்தி தற்கொலைக்கு தூண்டுகிறது. திமுக அரசு மாணவர்களின் தற்கொலைக்கு திமுக அரசை காரணம். நீட் தேர்வை தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை. எந்த மாநில முதலமைச்சர்களும் நீட் வேண்டாம் என எதிர்க்காத போது, தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும் நீட் வேண்டாம் என எதிர்த்து, மாணவர்களின் மன தைரியத்தை உடைத்து வருகிறார். ஆசிரியர்களிடமும் அரசியல் கட்சி சார்பை ஏற்படுத்தியிருக்கிறது திமுக. மாணவர்களுக்கு நீட் பயிற்சியை தமிழக அரசு அளிப்பதில்லை நீட் வேண்டாமென திமுக அரசு சொன்னாலும், நீட் தேர்வு கட்டாயம் இருக்கும். குடியரசுத் தலைவர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பதான் போகிறார் என்றார்.

annamalai

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தேவையற்றது. இது தமிழகத்தின் கருப்பு நாள். சில நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்க, அவர்களை திருப்திப்படுத்தவே ,மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டண விலை உயர்வை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தேர்தலில் திமுகவுக்கு பெரிய அடியாக இது இருக்கும் என்று கூறிய அவர், ராகுல் காந்தி பாதை யாத்திரை என்பது மக்களை இணைப்பதா அல்லது பிரிப்பதா என்பது தெரியவில்லை என்று விமர்சித்தார். இதனிடையே சென்னை, ராஜ்பவனில் நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜக நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் சந்திபில்  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய பாஜக சார்பில் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.