மோடி காலில் விழுந்த எஸ்.பி.வேலுமணிக்கு திமுக கூட்டணி குறித்து பேச தகுதியில்லை- முத்தரசன்

 
mutharasan

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோவையில் உள்ள கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

எஸ்.பி வேலுமணி அறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.. வீட்டின் முன்  திரண்ட அதிமுக தொண்டர்கள். பரபரப்பு | Anti Corruption raid in ex minister sp  velumani ...

அப்போது பேசிய முத்தரசன், “பணம் செல்லாது என்ற அறிவிப்பால் அரசு அறிவித்த நோக்கம் செயல்பட்டதா? கருப்பு பணம் அதன் மூலம் சட்டபூர்வமாக வெள்ளை பணமாக்கப்பட்டது. இதில் சாதாரண ஏழை,எளிய மக்கள்தான் பாதிக்கப்பட்டனர். பலர் உயிரிழந்தனர். 4 நீதிபதிகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினர். கருப்பு பணம் ஒழியவில்லை. ஆர்.பி.ஐ சுதந்திர அமைப்பு. ஆனால் மோடி ஆட்சிக்கு பின் சீர் குலைந்துள்ளது. நீதிபதிகளுக்கு மக்களின் மீது அக்கறை இல்லை. கார்ப்ரேட் நிறுவனங்களின் வளர்ச்சி தான் வளர்ச்சி. 

ஈசாவில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை கோவை மாவட்ட காவல்துறை மென்மையான போக்கை கையாளாமல் இருக்க வேண்டும். ஈசாவில் கணவரை அழைத்து பேசி ஜக்கி உத்திராட்ச மாலை போட்டுள்ளார். ஒன்றாம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் ஏன் அவ்வளவு அவசரமாக பிரேத பரிசோதனை செய்தார்கள். செல்வாக்கு பெற்றவர்களுக்கு ஒரு நீதி. எஸ். பி வேலுமணி போல் அடிமை யாரும் இல்லை. அவர் முதுகில் உள்ள அழுக்கை துடைக்கட்டும். வேலுமணிக்கு கடுகு அளவு கூட திமுக கூட்டணியை பற்றி பேச தகுதியில்லை. மோடி காலில் விழுந்தவர் அவர். 

நீதிமன்றம் எதைப் பற்றி கவலைப்பட வேண்டுமோ அதை பற்றி கவலைப்படவில்லை. அதிகாரம் இருக்கா என்பதை பற்றியே விசாரணை நடந்துள்ளது.ஒரு தாள், இரண்டு தாள் வைத்தவர்கள் தான் சிரமப்பட்டனர். கோடி கோடியாக வைத்தவர்கள்  சிரமப்படவில்லை.திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகள் இன்னும் உள்ளன” எனக் கூறினார்.