சுபஸ்ரீ மரணத்தில் ஜக்கிதேவிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும்- முத்தரசன்

 
mutharasan

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோவையில் உள்ள கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

பாம்பின் வாயில் சிக்கிய தவளை போல அதிமுக...' -முத்தரசன் விமர்சனம் |  nakkheeran

அப்போது பேசிய அவர், “ஈஷாவின் மீது பல்வேறு புகார்கள் வருகின்றன. தற்கொலை, நில ஆக்கிரமிப்பு, வனவிலங்கு வேட்டையாடுகிறார்கள், என பல்வேறு குற்றச்சாட்டு உள்ளது. கடந்த டிசம்பர் 11முதல் 18 வரை சைலண்ட் நிகழ்வு நடைபெற்றது. இதில் சுபஸ்ரீ ஈசாவில் பயிற்சிக்காக வருகிறார். நிகழ்வு முடிந்து மனைவியை அழைத்து செல்ல கணவர் வரும்போது அந்த பெண் வரவில்லை. இது தொடர்பாக கணவர்  18ம் தேதி புகார் அளித்துள்ளார். ஒன்றாம் தேதி அழுகிய நிலையில் சுபஸ்ரீ கண்டெடுக்கப்பட்டார். அவசரம் அவசரமாக பிரேத பரிசோதனை அன்றே செய்யப்பட்டது. 18ஆம் தேதிக்கும் 1ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் டிசம்பர் 24 ல் சாமியார் உரையாடி கணவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சுபஸ்ரீ கொலை செய்யப்பட்டிருக்கலாம். ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் செல்வாக்கு மிக்கவர்,பிரதமரே இங்கு வருகிறார்.பாஜக தேசிய தலைவர் நட்டாவும் ஈஷாவிற்கு வந்தார்.ஒன்றிய அரசின் செல்வாக்கு பெற்ற நிறுவனமாக ஈஷா உள்ளது. சுபஸ்ரீயின் மரணம் மறைக்கப்படுகிறது என பொதுமக்களுக்கு ஐயம் உள்ளது. ஜக்கி செல்வாக்குடன் இருக்கலாம், ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம்,காவல்துறையின் அமைதி புதிராக உள்ளது. மாநில அரசு நீதிபதியை தேர்வு செய்து,முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம்தான் படுகொலைகளை நிறுத்த முடியும். வரும் 6 ம் தேதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் விசாரணை வலியுறுத்தி கோவையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். பலரின் பினாமியாக ஈஷா செயல்படுகிறது. 

ஈஷா விவகாரத்தில் மற்ற அரசியல் கட்சிகளை சந்தித்து பேசி அனைத்து முன் முயற்சிகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும். ஜக்கி வாசுதேவிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.