ரூ.500-க்கு கழிவறையில் ஓரினசேர்க்கை! வலிதாங்க முடியாத இளைஞர் வாலிபரை கொன்றதால் கொடூரம்

 
murder

சென்னையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன் கொலை செய்த வடமாநிலத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

orinaserkai prachanai: நான் பையன்... என்னுடன் பணிபுரியும் ஆண் ஒருவர்  பாலியல் ரீதியாக தூண்டுகிறார்... என்ன செய்வது? - Samayam Tamil

கடந்த 2021 ஆண்டு பிப்ரவரி மாதம் பாரிமுனை முத்துசாமி பாலம் அருகே உள்ள பாழடைந்த கழிவறையில் 30-35 வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் உடற்கூறு ஆய்வில் திறந்து கிடந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிய வந்ததையடுத்து மர்ம மரணம் என பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி பூக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

கொலை செய்யப்பட்ட நபர் யார்? கொலை செய்த நபர் யார்? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட நபர் யாரென CCTNS( Crime and Criminal Tracking Network & Systems) வலைதளம் மூலம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டததில் வியாசர்பாடி காவல் நிலையத்தில் சதிஷ்குமார்(30) என்பவர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்து அவரின் பெற்றோரிடம் டி.என்.ஏ சோதனை செய்து இறந்த நபர் சதீஷ்குமார் என்பதை உறுதி செய்தனர். 

இந்த நிலையில் சிசிடிவி காட்சியில் சம்பவம் நடந்த அன்று  கழிவறையிலிருந்து கால் சற்று நடக்கமுடியாத நபர் ஒருவர் வெளிவருவதை கண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர் ராஜீவ்காந்தி மருத்துவமனை பகுதிகளிலுள்ள பிளாட்பார்ம்களில் தங்கி வந்தவர் என்பதும், அவர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பகதூர்(26) என்பதும் கொலை சம்பவத்திற்கு பின்னர் அவர் தலைமறைவாகி உள்ளார் என்பதும் தெரிய வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் சென்னை வந்த பகதூரை பூக்கடை உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் பிரபுவின் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட பகதூரிடம் பூக்கடை போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று பகதூர், முத்துசாமி பாலம் அருகே அமர்ந்து இருந்ததாகவும் அப்போது அங்கு வந்த வியாசர்பாடியைச் சேர்ந்த சதீஷ்குமார் தன்னுடன் வந்தால் ரூபாய் 500 தருவதாகவும் கூறி அவரை பாழடைந்த கழிவறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சதீஷ்குமார் பகதூரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுப்பட்டு தாக்கியுள்ளார். இதனால், வலியில் துடித்த பகதூர் சதீஷ்குமார் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷ்குமாரை இரண்டு முறை குத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் போலீசாரின் விசாரணையில், வலி தாங்க முடியாமல் சதீஷ்குமாரை தான் கத்தியால் குத்தியதாகவும் ஆனால் அவர் இறந்து போனது தற்போது தான் தனக்கு தெரியும் எனவும் பகதூர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து பகதூரை கைது செய்த பூக்கடை போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.