கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த ஒன்றரை வயது குழந்தையை கொன்ற தாய்

 
baby leg

கருமத்தம்பட்டி அருகே மர்மமான முறையில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் கள்ளக்காதல் காரணமா? எதிர்பாராத விபத்தா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கு சசிகலா என்ற மனைவி மற்றும் நான்கு வயது உடைய ஒரு ஆண் குழந்தையும், ஒன்றரை வயது உடைய ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பாக இளங்கோவன் தனது மனைவியான சசிகலாவை அழைத்துக்கொண்டு வேலை தேடி கருமத்தம்பட்டி அருகே உள்ள பதுவம்பள்ளி கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது செந்தில்குமார் என்பவர் அப்பகுதியில் வேலை வாங்கித் தருவதாகவும், தனது வீட்டில் வாடகைக்கு வீடு இருப்பதாகவும் கூறி சசிகலா மற்றும் இளங்கோவனை அழைத்து சென்றுள்ளார். ஏற்கனவே செந்தில் குமாருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக அவருடைய மனைவியைப் பிரிந்து தற்போது தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் இளங்கோவன் அருகில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து பணி செய்து வந்துள்ளார். இதனிடையே சசிகலாவுக்கும் செந்தில்குமார் இருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த பழக்கம் இளங்கோவனுக்கு தெரியவரவே, சசிகலாவுடன் சண்டை போட்டுக்கொண்டு தனது மகனை அழைத்துக்கொண்டு கோத்தகிரி சென்றுள்ளார். பின்னர் சசிகலா இளங்கோவனுடன் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இருவரும் மாலை வேலைகளில் ஒன்றாக அமர்ந்து குடிக்கும் பழக்கத்தை கொண்டு இருந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று இருவரும் ஒன்றாக சேர்ந்து குடித்துள்ளனர். அப்போது குழந்தை சத்தமாக அழுது கொண்டிருந்த நிலையில் குழந்தை கீழே விழுந்து உள்ளது. கீழே விழுந்ததில் குழந்தை பேச்சு மூச்சு இல்லாத காரணத்தினால் குழந்தையை எடுத்துக்கொண்டு சசிகலா பதுவம்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து குழந்தை இறந்த தன் காரணம் கள்ளக்காதலா? வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர் இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.