திராவிட இயக்கம்தான் கலைகளை வளர்த்தது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
mkstalin

சாமானிய மக்களின் வலிகளை கலைகளின் வழியாக பேசியது திராவிட இயக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

mkstalin

சென்னை தீவுத்திடலில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை தொடங்கிவைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். பேசிய அவர், “ திராவிட இயக்கம்தான் கலைகளை வளர்த்தது. கலையை பாமர மக்களுக்கும் உரியதாக மாற்றியதும் திராவிட இயக்கம்தான். சாமானிய மக்கள் மொழியில் பேசியது, அடித்தட்டு மக்களிடம் கலையை கொண்டு சென்றது திமுக தான். கலைஞர்கள் வறுமையின்றி வாழ்ந்தால் தான் கலைகள் வாழும். கலைகளின் வழியாக சாமானிய மக்களின் வலியை பேசியது திராவிட இயக்கம்தான்.

சாதிகளின் பெயரால், சமயங்களின் பெயரால், சமத்துவத்துக்கு சமாதி கட்ட நினைத்த போக்குக்கு எதிரான சம்மட்டியாய், மூடப் பழக்கங்களுக்கு எதிரான முரசொலியாய் கலைகளை மாற்றியது திராவிட இயக்கம், சாமானிய மக்களின் வலிகளை கலைகளின் வழியாக பேசியது. சட்டமன்றம், அரசு நிகழ்ச்சிகள், ஆய்வுகள் என தொடர்ந்து நான் பிஸியாக இருந்தாலும், மிகுந்த ஆவலோடு இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.தமிழர்களாகிய நாம் ஒன்று சேர கலைகள்தான் இணைப்பு பாலமாக அமையும். தமிழன் என்றோரு இனமுண்டு. தனியே அவர்க்கொரு குணமுண்டு. 10 மாவட்டங்களில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் பொங்கல் கலை நிகழ்ச்சிகள் நடத்த ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” என பேசினார்.