ப்ளீஸ் எனக்கு போன் பண்ணாதீங்க! மனோ தங்கராஜிடம் கதறும் விதவை பெண்

 
மனோ தங்கராஜ்

சென்னை ஆர். கே. நகரில் அண்மையில் அமைச்சர் மனோ தங்கராஜ்  முன்னிலையில் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்,  பாஜக மகளிர் பிரிவில் இருக்கும் நடிகைகள் குஷ்பூ, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம் ஆகியோரை ஒருமையில் அழைத்து, ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசினார். 

Junior Vikatan - 22 June 2022 - முட்டாளாக இருக்கிறார் எம்.ஆர்.காந்தி! -  அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்! | minister mano thangaraj interview

அமைச்சர் முன்னிலையில்  ஒரு திமுக நிர்வாகி இப்படி பேசுகிறார், அதனை அமைச்சர் கைதட்டி ரசித்துக் கொண்டிருக்கிறார் என இந்த விவகாரம் பூதாகரமானது. இதை அடுத்து திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி இந்த விவகாரத்துக்கு மன்னிப்பு கேட்டார்.  ஆனால் முதல்வரோ, அன்று மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் மனோ தங்கராஜோ நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. 


இந்நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ், விதவை பெண்ணிடம் தவறான எண்ணத்தில் பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், உன்னிடம் பேச வேண்டுமென மனோ தங்கராஜ் கூறுகிறார். அதற்கு அந்த பெண், சார் இனிமே எனக்கு போன் பன்னாதீங்க... உங்க கிட்ட பேச எனக்கு பிடிக்க... தயவு செய்து இனி என்னை தொந்தரவு செய்யாதீர்கள். பலமுறை சொல்லியும் நீங்க புரிந்துகொள்ள மாட்டீங்கிரீங்க. எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. உங்களிடம் பேசி என்னை வருத்திக்கொள்ள நான் விரும்பல” எனக் கூறுகிறார். அதற்கு மனோ தங்கராஜ் சரிமா... சரிமா என போனை கட் செய்கிறார்.