கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டமும் மாற்றப்படும் - அமைச்சர் பொன்முடி தகவல்

 
ponmudi

பொறியியல் பாடத்திட்டம் போல் கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டமும் விரைவில் மாற்றப்படும் என தமிழக உயர்க்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்ட மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் உயர்க்கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: பொறியியல் பாடத்திட்டம் போல் கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டமும் மாற்றப்படும். பொறியியல் முதலாமாண்டு, 2ம் ஆண்டுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டது போல் 3ம் ஆண்டுக்கும் புதிய பாடத்திட்டம் வரும். முன்பிருந்த பாடத்திட்டத்திற்கு பதில் தற்போதைய காலத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும். 3,5,8ம் வகுப்பு என இன்று பலவற்றிலும் நுழைவுத் தேர்வை திணிக்கப் பார்க்கின்றனர். இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.