குடிநீர் வடிகால் வாரிய பணிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்க கூடாது - அமைச்சர் கே.என்.நேரு

 
nehru

குடிநீர் வடிகால் வாரிய பணிகளுக்கு, நீதிமன்றம் தடை விதிக்கக் கூடாது என, மத்திய அரசு சட்டம் போட வேண்டும் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

சென்னையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் மேலாண்மை தொடர்பான, தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டார். இந்த கருத்தரங்கில் அவர் பேசியாதாவது: அம்ருத் திட்டத்தை, டிசம்பருக்குள் முடிக்க, மத்திய அரசு உத்தரவிடுகிறது. எனவே, குடிநீர் வடிகால் வாரிய பணிகளுக்கு, நீதிமன்றம் தடை விதிக்கக் கூடாது என, மத்திய அரசு சட்டம் போட வேண்டும். மத்திய அரசு வழங்க வேண்டிய அனுமதியை, உடனடியாக வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால், நாங்கள் விரைவாக பணியை முடித்து விடுவோம்.அம்ருத் திட்டத்தில், 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குகின்றனர். இப்பணிகளை முடிக்க, மத்திய அரசு கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதேபோல், மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டத்திற்கு, கூடுதல் கால அவகாசம் வழங்கினால், இல்லம்தோறும் குடிநீர் வழங்கும் பணியை சிறப்பாக செய்து முடிப்போம்.காவிரியில் மட்டும் 300 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்துள்ளது.தமிழகத்தில் பாலாறு, தென்பெண்ணையாறு, தாமிரபரணி, வைகை ஆற்று நீர் வீணாவதை தடுத்து, புதிய திட்டத்தை செயல்படுத்த, அம்ருத் திட்டத்தில், மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.