கரகாட்ட நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..

 
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
 

கோயில் நிகழ்ச்சிகளில் கரகாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  

மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர்,  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை  தாக்கல் செய்திருந்தார். அதில், மேலப்பட்டி  கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவிலில்  இந்த வாரம் தொடர்ந்து திருவிழாக்கள்  நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதியாக வருகின்ற 8 ஆம் தேதி அன்று இந்த திருவிழாவின் இரவு நேரத்தில் கரகாட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கக் கோரியும்,  அந்த கரகாட்டம் நிகழ்ச்சிக்கு காவல்துறையுடைய பாதுகாப்பு  அளிக்க உத்தரவிட வேண்டுமென்றும் கோரியிருந்தார்.  

 கரகாட்ட நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  உத்தரவு..

 இந்த நிலையில் இந்த மனு இன்று  நீதிபதி சுகுமாரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தரப்பில் எந்த ஆட்சிரபனையும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து   கரகாட்டம் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய நீதிபதி,  பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பொதுவாகவே  கரகாட்டம் என்றால்,  குத்துப்பாட்டு அரைகுறை ஆடைகள், ஆடல்  பாடல் மற்றும் இரட்டை அர்த்த வார்த்தைகள் இருக்கும்.   இதனை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு கட்டுப்பாடுகளை   விதித்துள்ளது.  அதாவது,   கரகாட்ட நிகழ்ச்சிகளில்  கண்ணியமான உடைகள் அணிந்திருக்க வேண்டும், அதேபோல இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது எனவும்,  அநாகரீகமான வரிகளைக் கொண்ட பாடல்களை பாடக்கூடாது என்றும்,  இரட்டை அர்த்த பாடல்களும்  இசைக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.  

 கரகாட்ட நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  உத்தரவு..

அதேபோல் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் ஜாதியினரையும் பாகுபாடு பார்க்காமல் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட  பல்வேறு நிபந்தனைகளை உயர் நீதிமன்ற மதுரைகிளை விதித்துள்ளது.  முக்கியமாக  கரகாட்ட நிகழ்ச்சிகள்  இரவு 7  மணி தொடங்கி இரவு 10 மணிக்குள் முடிக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடகாட்ட நிகழ்ச்சிகளுக்கு  விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீரும் பட்சத்தில்,   நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கலாம் என்றும்,  நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தலாம்  என்றும் காவல்துறைக்கு அனுமதி வழங்கி  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.