நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே இலக்கு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
Ma Subramanian

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தமிழ்நாடு அரசின் இலக்கு எனவும்,  நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய அரசுக்கு விரிவான பதில் அளிக்கப்படும் எனவும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கூறியதாவது: நீட் விலக்கு மசோதாவை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். கவர்னர் வழியாக தமிழக சட்டத்துறைக்கு மத்திய அரசு அனுப்பிய குறிப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. நீட் தேர்வு தகுதியின் அடிப்படையிலான தேர்வு என்று மத்திய அரசு அனுப்பிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசியக் கல்விக் கொள்கைக்கு முரணாக உள்ளதா என மத்திய அரசு அனுப்பிய குறிப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது நீட் விலக்கு தொடர்பாக மத்திய அரசின் 2 துறைகள் கேட்ட கேள்விகளுக்கு விரிவான பதிலளிக்க தயாராக உள்ளோம். மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு அனுப்பப்படும். நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்கப்படும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே அரசின் இலக்கு. சட்ட வல்லுநர்களின் ஆலோசனையுடன் தயாரான பதிலுக்கு முதல்வரிடம் ஓரிரு நாளில் ஒப்புதல் பெறுவோம். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்