ஒருங்கிணைந்த நீதிமன்ற அடிக்கல் நாட்டுவிழா - தலைமை நீதிபதி சிறப்பாக பணியாற்றி வருகிறார் என மு.க.ஸ்டாலின் பேச்சு

ஒருங்கிணைந்த நீதிமன்ற அடிக்கல் நாட்டுவிழா - தலைமை நீதிபதி  சிறப்பாக பணியாற்றி வருகிறார் என மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை மாவட்ட சார்பு நீதிமன்றங்களுக்கான ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  

ஒருங்கிணைந்த நீதிமன்ற அடிக்கல் நாட்டுவிழா - தலைமை நீதிபதி  சிறப்பாக பணியாற்றி வருகிறார் என மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை மாவட்ட  சார்பு நீதிமன்றங்களுக்கு ஒருங்கிணைந்த பல அடுக்கு நீதிமன்றம் ரூ. 315 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் கட்டடங்களும் புதுப்பிக்கப்பட உள்ளன.   இதற்கான அடிக்கல் நாட்டும் விழா சென்னை  உயர்நீதிமன்ற வளாகத்தில்  நடைபெற்று வருகிறது.  இதில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பங்கேற்று திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  மேலும்  உச்சநீதிமன்ற நீதிபதிகள்  எஸ்.கே.கவுல், இந்திரா பானர்ஜி  ராம சுப்பிரமணிடம், சுந்தரேஷ், சென்னை  உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல்  அமைச்சர்கள் எ.வெ.வேலு,  ரகுபதி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றுள்ளனர்.  

ஒருங்கிணைந்த நீதிமன்ற அடிக்கல் நாட்டுவிழா - தலைமை நீதிபதி  சிறப்பாக பணியாற்றி வருகிறார் என மு.க.ஸ்டாலின் பேச்சு

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  தற்போது உள்ள கட்டிடம் போலவே புதிய கட்டிடமும் இருக்கே வேண்டும் என அமைச்சரிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார்.  தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர்,   நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டார்.  சென்னை உயர்நீதிமன்ற பயன்பாட்டிற்காக பழைய சட்டக்கல்லாரி கட்டிடம் புதுப்பிக்கப்படுவதாகவும்,   தற்போதுள்ள கட்டிடம் போலவே புதிய கட்டிடமும் இருக்க வேண்டும் என அமைச்சரிடம் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.  மேலும்,  பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாப்பதென்பது வரலாற்றை பாதுக்காப்பது போன்றது என்றும் அவர் கூறினார்.   தொடர்ந்து பேசிய அவர்,  வரும் 30-ம் தேதி ஓய்வு பெறும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி சிறப்பாக பணியாற்றி வருவதாகவும், அவருக்கு தனது வாழ்த்துக்கள் எனறும் ஸ்டாலின்  தெரிவித்தார்.