காசி தமிழ் சங்கமம் இன்று தொடக்கம் - இளையராஜா இசை

 
i

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.    வாரணாசியில் ஒரு மாதம் நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியினை பிரதமர் மோடி இன்று பங்கேற்று தொடங்கி வைக்கிறார்.  

k

 காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான பழமையான கலாச்சார தொடர்பினை மீண்டும் புதுப்பிக்கவும், கொண்டாடவும் காசி தமிழ்ச் சங்கம் விழா உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   

சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மத்திய கலாச்சாரம், ஜவுளி, ரயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல் ஒளிபரப்பு ஆகிய அமைச்சகங்களும் உத்தரப்பிரதேச அரசும் இணைந்து செய்துள்ளன.   இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அடுத்த மாதம் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

ka

 ஒரு மாதம் நடைபெறவிருக்கும் இந்த விழாவை பிரதமர் மோடி வாரணாசியில் இன்று தொடங்கி வைத்து உரையாடுகிறார்.  இந்த ஒரு மாத நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.