செஸ் ஒலிம்பியாட்- கமல்ஹாசனின் குரலில் மேடையை அதிரவைத்த தமிழ் பண்பாட்டு நிகழ்த்துக்கலை

 
ச்ஃப்

நடிகர் கமல்ஹாசனின் குரலில் தமிழ்நாட்டின் கலாசார வளர்ச்சி குறித்த நிகழ்த்துக்கலை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் நிகழ்த்தப்பட்டது.

ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன் மயிலாடும்பாறையில் தமிழர் கலை, கலாசாரம் செழித்து இருந்ததற்கான சான்று இருந்ததாக நாடகம் மூலம் தமிழர் மற்றும் தமிழின் தொன்மையை நடனக்கலைஞர்கள் விளக்கினர். இந்திய பெருங்கடல் மார்க்கமாக ராஜேந்திர சோழன் கடல் கடந்து பல நாடுகளுக்கு சென்று ஆண்டார் என நாடகம் வாயிலாக எடுத்துரைக்கப்பட்டது. அதேபோல் சேர, சோழ, பாண்டியர்களின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக கதை வடிவில் அமைந்த நாடகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கல்லணை கட்டப்பட்டதன் வரலாறு முப்பரிமாண படத்துடன் விளக்கப்பட்டது. தமிழர் பெருமைகளை வெளிப்படுத்தும் இந்த சிறப்பு நிகழ்ச்சியை பிரதமர் மோடியும், வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

நடனத்தின் மூலம் ராஜேந்திர சோழனின் பெருமை எடுத்துரைக்கப்பட்டது. தமிழர்களின் வீர விளையாட்டுகள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து நாடகம் வாயிலாக திரையிடப்பட்டது. அதில் தமிழர்கள் தற்காப்பு கலையில் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு சிலம்பம் ஒரு சான்று என கூறப்பட்டது.

ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு, பரத நாட்டியம் உள்ளிட்டவையும் தத்ரூபமாக நாடகம் வாயிலாக செய்து காட்டப்பட்டது.  தொடர்ந்து தமிழர்களின் சிற்பக்கலையை விளக்கும் விதமாக மாமல்லபுரத்தின் சிறப்புகள் நடனமாக எடுத்துரைக்கப்பட்டது. தமிழ் இலங்கியங்களின் பெருமைகளும், தமிழர்கள் சந்தித்த பேரழிவுகளும் நாடக வடிவில் விளக்கப்பட்டன.