கேரள இலக்கியத் திருவிழாவில் பங்கேற்கும் கமல்ஹாசன்..

 
kamal-haasan-344

கேரள இலக்கியத் திருவிழாவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார் என்றும், `நான் கண்டறிந்த அரசியல்' (Finding my politics) என்ற தலைப்பில் அவர் உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில், மாபெரும் இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது. டி.சி. கிழக்கம்முறி அறக்கட்டளை  சார்பில்  ஜனவரி 12-ம் தேதி முதல் ஜனவரி 15-ம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.  ஆசியாவின் 2வது பெரிய இலக்கியத் திருவிழாவாகக் கருதப்படும் இந்த நிகழ்ச்சியில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளர்கள், பொருளியல் நிபுணர்கள், தொழில்முனைவோர், அரசியல்வாதிகள், கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்ச்சியில்,  கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர் , அரசியல்வதியாகவும்  பங்காற்றிவரும் (மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்) கமல்ஹாசன்  பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

vijay with kamal

வரும் 15-ம் தேதி மாலை 4 மணியளவில் `நான் கண்டறிந்த அரசியல்' (Finding my politics) என்ற தலைப்பில் கமல்ஹாசன்  உரை ஆற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க நிகழ்வான, இந்த மிகப்பெரிய இலக்கியத் திருவிழாவில் கமல்ஹாசன்  பங்கேற்பது தமிழர்களுக்குப் பெருமையளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ஒரு சிறந்த கலை ஆளுமையாகவும், அரசியல் கட்சித் தலைவராகவும் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, உரையாற்றுவார் என்று விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.  ஏற்கெனவே, தான் தொகுத்து வழங்கும் `பிக் பாஸ்' நிகழ்ச்சியில், மலையாளத்தின் பிரபல எழுத்தாளுமைகளையும், அவர்களது படைப்புகளையும் கமல்ஹாசன்  அறிமுகப்படுத்தியிருக்கிறார்.